Showing posts with label கவிதை. ஊனமுற்றோருக்கு.. Show all posts
Showing posts with label கவிதை. ஊனமுற்றோருக்கு.. Show all posts

Saturday, September 5, 2009

ஊனமுற்றோருக்கு


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப் பாய்ந்து
ஒற்றைக் காலில்
ஒரு கைப்பிடியில்
அலைந்து நின்றான்
மிதிவெடி மிதித்தவன்!

சட்டென திரும்பி
ஜன்னல் ஊடே
ஓடும் மரங்களை
அதிசயத்துப் பார்த்து
பாவனை செய்தேன்!

ஒரு மணிநேரம்
ஒற்றைக் காலில்
தொங்கிக் களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!

என் இருக்கைத் தலைமேல்
அழகு வாசகமாய்
இது ஊனமுற்றோருக்கு!